புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் நிகி பூனாச்சா கோப்பை வென்றார்.
இந்தியாவின் டில்லியில் ஆண்களுக்காக சர்வதேச ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீரர் நிகி கலியாண்டா பூனாச்சா, கடந்த வாரம் நடந்த தொடரில் கோப்பை வென்ற அமெரிக்காவின் ஆலிவர் கிராபோர்டை சந்தித்தார்.
முதல் செட்டை பூனாச்சா 6–3 என கைப்பற்றினார். இரண்டாவது செட் ‘டை பிரேக்கர்’ வரை நீடித்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட பூனாச்சா 7–6 என வசப்படுத்தினார்.
முடிவில் பூனாச்சா 6–3, 7–6 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.