மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, 9வது இடத்தில் உள்ள கனடாவின் பியான்கா மோதினர். முதல் செட்டை ஆஷ்லே பார்டி 6–3 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், 2வது செட்டில் 4–0 என முன்னிலை வகித்திருந்த போது, வலது காலில் ஏற்பட்ட காயத்தால் பியான்கா போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆஷ்லே பார்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து 2வது முறையாக (2019, 2021) கோப்பை வென்றார். இது, இந்த சீசனில் ஆஷ்லே பார்டி வென்ற 2வது சாம்பியன் பட்டம். கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ‘யர்ரா ரிவர் கிளாசிக்’ தொடரில் கோப்பை வென்றிருந்தார்.