Advertisement


‘ஆர்ம் பாண்ட்’ விலை ரூ. 55 லட்சம் * ரொனால்டோ துாக்கி எறிந்தது

ஏப்ரல் 02, 2021 22:39
 Comments  
 


Armband Ronaldo threw away sold at auction
 

பெல்கிரேடு: ரொனால்டோ கோபத்தில் துாக்கி எறிந்த ‘ஆர்ம் பாண்ட்’ ரூ. 55 லட்சத்துக்கு ஏலம் போனது.

உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் சமீபத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, செர்பியாவை சந்தித்தது. பெல்கிரேடில் நடந்த இப்போட்டி 2–2 என ‘டிரா’ ஆனது. இதன் இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் ரொனால்டோ அடித்த கோல் ஏற்றுக் கொள்ளப்பட்டவில்லை. இதனால் கோபம் அடைந்த ரொனால்டோ, ஆட்டம் முடிவதற்காக அம்பயர் ‘விசில்’ ஊதும் முன்பே, மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அப்போது கையில் அணிந்திருந்த கேப்டனுக்கு உரிய நீல நிற ‘ஆர்ம் பாண்ட்டை’ தரையில் வீசி எறிந்தார். அங்கிருந்த ஒரு தீயணைப்பு வீரர் இதை எடுத்து, அறக்கட்டளையிடம் வழங்க, அவர்கள் இணையதளத்தில் ஏலம் விட்டனர். மூன்று நாட்கள் நடந்த ஏலத்தில், ஒருவர் ரூ. 55 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இந்தப் பணம் முதுகெலும்பு தசைநார் கிழிசலால் அவதிப்படும் 6 மாத குழந்தை மருத்துவ செலவுக்கு வழங்கப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?