மொனாஸ்டிர்: டுனிசியா டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் கர்மான் கவுர் தண்டி.
டுனிசியாவின் மொனாஸ்டிர் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி, ஹங்கேரியின் லுகாக்சை சந்தித்தார். முதல் செட்டை கர்மான் கவுர் 6–0 என எளிதாக வென்றார் கர்மான் கவுர்.
தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6–0 என போகிற போக்கில் கைப்பற்றினார். முடிவில் கர்மான் கவுர் 6–0, 6–0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.