Advertisement


நாயகன் ‘யார்க்கர்’ மன்னன் நடராஜன் * கிரிக்கெட் உலகம் பாராட்டு

மார்ச் 29, 2021 22:43
 Comments  
 


India vs England tour, cricket, ODI, Pune, Natarajan, kohli, sam curran
 

புனே: மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி நாயகனாக ஜொலித்த தமிழக ‘யார்க்கர்’ மன்னன் நடராஜனுக்கு பாராட்டு குவிகிறது.

புனேயில் நடந்த பரபரப்பான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி(329), இங்கிலாந்தை(322/9) வீழ்த்தி கோப்பை வென்றது. இதில் கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் சாம் கர்ரான் 90 ரன்களுடன் மிரட்டிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் பந்தை நடராஜனிடம் கொடுத்தார் கேப்டன் கோஹ்லி. பதட்டமான கடைசி ஓவரை ‘கூலாக’ வீசினார் நடராஜன். வரிசையாக ‘யார்க்கர்’களாக போட்டுத் தாக்கிய இவர், 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இந்திய அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். சாம் கர்ரான்(95*) ஆட்ட நாயகன் விருதுடன் ஆறுதல் தேடினார். இக்கட்டான தருணத்தில் கலக்கலாக பந்துவீசிய நடராஜனை பாராட்டிய சிலர்.

கோஹ்லி, இந்திய அணி கேப்டன்:

உலகின் ‘டாப்–2’ அணிகள் மோதும் போது பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரான் சிறப்பாக போராடினார். கடைசி கட்டத்தில் நட்டு(நடராஜனை செல்லமாக), ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி, போட்டியை இந்தியா வசம் கொண்டு வந்தனர்.

மைக்கேல் வான், இங்கிலாந்து முன்னாள் கேப்டன்:

‘டுவென்டி–20’ கிரிக்கெட் வரவால், ‘யார்க்கர்’ வகை பந்துவீச்சை சுலபமாக வீசலாம் என நினைக்கின்றனர். ஆனால், துல்லியமாக வீசுவது கடினம். கொஞ்சம் தடுமாறினாலும், பந்து சிக்சருக்குப் பறக்கவிடப்படும். பதட்டப்படாமல் ‘யார்க்கர்’ வீசும் கலையை பிரட் லீ, மலிங்காவிடம் கற்கலாம். மூன்றாவது போட்டியில் சிறிது வாய்ப்பு கிடைத்திருந்தாலும் சாம் கர்ரான் விளாசி இருப்பார். இதனை உணர்ந்து அடித்து ஆட முடியாதபடி, கர்ரான் கால் பேடுகளுக்கு குறிவைத்து துல்லிய ‘யார்க்கர்களை’ வீசினார் நடராஜன். கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கும் நிலையில், நடராஜனின் இதயத் துடிப்பு எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். துல்லியமாக ‘யார்க்கர்’ பந்துகளை வீசிய நடராஜனுக்கு எனது பாராட்டு.

சாம் கர்ரான், இங்கிலாந்து வீரர்:

வெற்றி பெற விரும்பினேன். இறுதியில் தோல்வி அடைந்த போதும், எனக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது. கடைசி ஓவரில் நடராஜன் பந்துகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. உண்மையிலேயே தான் ஒரு சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

ரெய்னா, இந்திய முன்னாள் வீரர்:

கடைசி ஓவரில் பதட்டப்படாமல் ‘யார்க்கர்’ வகை பந்துகளை அருமையாக வீசினார் நடராஜன். இவரை மனதார பாராட்டுகிறேன்.


ரசிகர்களுக்கு நன்றி

நடராஜன் தனது ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்ட செய்தியில்,‘கிரிக்கெட் ஒரு அழகான விளையாட்டு, இந்திய அணியின் மறக்க முடியாத ஒருநாள் தொடர் வெற்றியில், எனது பங்களிப்பும் இருந்ததில் மகிழ்ச்சி. இந்திய வீரர்களின் ‘டிரசிங் ரூமில்’ நிலவும் சகோதரத்துவம், கடைசி வரை நம்பிக்கை இழக்காத உறுதி என்னை பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு ‘இன்ச்சும்’ போராடி வெல்லும் போது, அதன் சுவை இன்னும் அதிகம் இனிக்கும். ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி,’என தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?