Advertisement


ஆஸி., இரண்டாவது வெற்றி * 106 ரன்னுக்கு சுருண்டது நியூசி.,

மார்ச் 05, 2021 17:21
 Comments  
 


australia vs newzealand cricket, finch
 

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த நான்காவது போட்டியில் 50 ரன்னில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 2–1 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. நேற்று நான்காவது போட்டி வெலிங்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங் தேர்வு செய்தது.

பின்ச் அபாரம்

ஆஸ்திரேலிய அணிக்கு வேட் (14), பிலிப்பே (13), மேக்ஸ்வெல் (18), ஸ்டாய்னிஸ் (19) என வரிசையாக ஏமாற்றம் தர, கேப்டன் பின்ச் அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. பின்ச் (79), ஜேய் ரிச்சர்ட்சன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். 

மேக்ஸ்வெல் கலக்கல்

நியூசிலாந்து அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. கப்டில் (7), செய்பெர்ட் (19) துவக்கத்தில் கைவிட்டனர். ‘மிடில் ஆர்டரில்’ கேப்டன் வில்லியம்சன் (8), ஜிம்மி நீஷம் (3), சான்ட்னரும் (3) விரைவில் வெளியேறினர். ஜேமிசன் அதிகபட்சம் 30 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 106 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா 50 ரன்னில் வெற்றி பெற்றது. தொடர் 2–2 என சம நிலையில் உள்ளது. 

 

முதல்வன்

நேற்று 79 ரன் எடுத்த பின்ச், சர்வதேச ‘டுவென்டி–20’ ல் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களில் வார்னரை (2265) முந்தி முதல்வன் ஆனார். இவர் 70 போட்டியில் 2310 ரன்கள் எடுத்துள்ளார்.  

* இந்த வரிசையில் முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் கோஹ்லி (2928), ரோகித் சர்மா (2773), நியூசிலாந்தின் கப்டில் (2763) உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?