Advertisement


ஸ்ரீகாந்த், ஜெயராம் வெற்றி

மார்ச் 03, 2021 21:59
 Comments  
 


Srikanth, Satwik, Ashwini pair through to second round of Swiss Open
 

பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். 

சுவிட்சர்லாந்தில் ‘சுவிஸ் ஓபன் சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது.  ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா மோதினர். முதல் செட்டை 18–21 என இழந்த ஸ்ரீகாந்த், அடுத்த செட்டை 21–18 என வசப்படுத்தினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் எழுச்சி பெற்ற ஸ்ரீகாந்த், 21–11 என கைப்பற்றினார். முடிவில் ஸ்ரீகாந்த் 18–21, 21–18, 21–11 என போராடி வென்றார். இந்திய வீரர் சவுரப் வர்மா, 21–19, 21–18 என சுவிட்சர்லாந்தின் கிறிஸ்டியனை வென்றார். அஜய் ஜெயராம், 21–12, 21–13 என தாய்லாந்தின் தம்மாசினை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரன்னாய், 19–21, 21–9, 17–21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் மார்க்கிடம் வீழ்ந்தார். 

இரட்டையர் அபாரம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்–சிராக் ஷெட்டி ஜோடி, 21–18, 19–21, 21–16 என ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர், மாத்யூ ஜோடியை வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்–அஷ்வினி பொன்னப்பா ஜோடி, ‘நம்பர்–2’ இடத்திலுள்ள இந்தோனோஷியாவின் பைசல், குளோரியா ஜோடியை 21–18, 21–10 என வீழ்த்தி அசத்தியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?