Advertisement


கோஹ்லிக்கு 10 கோடி ரசிகர்கள் * ஐ.சி.சி., பாராட்டு

மார்ச் 02, 2021 21:33
 Comments  
 


Virat Kohli joins Ronaldo, Messi in an elite list, becomes 1st cricketer with 100 million Instagram followers
 

புதுடில்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கோஹ்லியை பின்பற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி 32. இவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். ‘டுவிட்டரில்’ மட்டும் 4.08 கோடி ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். 

தற்போது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் கோஹ்லியை பின்பற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை 10.3 கோடியாக உள்ளது. இந்த பட்டியலில் இணைந்த முதல் இந்தியர், முதல் ஆசியர், முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைகள் பெற்றார் கோஹ்லி. தவிர உலகளவில் அதிக ‘இன்ஸ்டாகிராம்’ ரசிகர்கள் கொண்ட நான்காவது விளையாட்டு நட்சத்திரம் ஆனார்.

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இவரை 26.5 கோடி ரசிகர்கள் ‘இன்ஸ்டாகிராமில்’ பின்பற்றுகின்றனர். அடுத்த இரு இடங்களில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி (18.6 கோடி), பிரேசிலின் நெய்மர் (14.7 கோடி) உள்ளனர். 

இந்திய அளவில் கோஹ்லி அடுத்து அதிகம் பின்பற்றப்படும் கிரிக்கெட் வீரர்களாக தோனி (3.04 கோடி), சச்சின் (2.78 கோடி), ரோகித் சர்மா (1.75 கோடி), ஹர்திக் பாண்ட்யா (1.62 கோடி), ரெய்னா (1.48 கோடி) உள்ளனர். இந்தியாவில் அதிக பிரபலங்கள் பட்டியலில் கோஹ்லிக்கு அடுத்து, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (6 கோடி), ஸ்ரதா கபூர் (5.8 கோடி), தீபிகா படுகோனை (5.3 கோடி), ‘இன்ஸ்டாகிராமில்’ அதிகம் பின்பற்றுகின்றனர்.

ஐ.சி.சி., பாராட்டு

கோஹ்லிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் உள்ளிட்டோருடன் கோஹ்லியும் இணைவது போல போட்டோ வெளியிட்டது. அதில்,‘10 கோடி ரசிகர்கள் ‘இன்ஸ்டாகிராமில்’ பின்பற்றும் முதல் கிரிக்கெட் நட்சத்திரம் கோஹ்லி,’ என தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?