Advertisement


வடகிழக்கு அணிக்கு 7வது வெற்றி: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது

பிப்ரவரி 23, 2021 21:50
 Comments  
 


Indian Super League Soccer, ISL Football, North East United, 7th Win, East Bengal
 

படோர்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 2–1 என, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. படோர்டாவில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வடகிழக்கு அணிக்கு 48வது நிமிடத்தில் சுஹைர் வடக்கேபீடிகா ஒரு கோலடித்தார். ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் சர்தாக் கோலுய் ‘சேம்சைடு’ கோலடித்து அதிர்ச்சி தந்தார். பின் எழுச்சி கண்ட இவர், 86வது நிமிடத்தில் ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார்.

ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 19 போட்டியில், 7 வெற்றி, 9 ‘டிரா’, 3 தோல்வி என, 30 புள்ளிகளுடன் வடகிழக்கு யுனைடெட் அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. ஈஸ்ட் பெங்கால் அணி, 19 போட்டியில், 3 வெற்றி, 8 ‘டிரா’, 8 தோல்வி என, 17 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?