புதுடில்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடிக்கு ‘பைபாஸ் ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது.
இந்திய ‘சுழல்’ ஜாம்பவான் பிஷன் சிங் பேடி 74. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பிறந்த இவர், 1967ல் கோல்கட்டாவில் நடந்த விண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடைசியாக 1979ல் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் விளையாடிய இவர், மொத்தம் 67 டெஸ்ட் (266 விக்கெட்), 10 ஒருநாள் போட்டிகளில் (7) பங்கேற்றார். தவிர இவர், 22 டெஸ்ட் போட்டிகளுக்கு (6 வெற்றி, 11 தோல்வி, 5 ‘டிரா’) கேப்டனாக செயல்பட்டார்.
சமீபத்தில் பிஷன் சிங் பேடிக்கு இருதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ‘பைபாஸ் ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது. தற்போது நலமாக இருக்கிறார். விரைவில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட உள்ளார்.