Advertisement


உபுல் தரங்கா ஓய்வு

பிப்ரவரி 23, 2021 21:07
 Comments  
 


Upul Tharanga, Sri Lanka, Cricket, Retirement, International Cricket
 

கொழும்பு: இலங்கை வீரர் உபுல் தரங்கா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை அணியின் துவக்க வீரர் உபுல் தரங்கா 36. கடந்த 2005, ஆக. 2ல் விண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் (2005, இடம்: ஆமதாபாத்) அறிமுகமானார். இதுவரை 31 டெஸ்ட் (1754 ரன்கள்), 235 ஒருநாள் (6951), 26 சர்வதேச ‘டுவென்டி–20’ (407) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக 2019ல் கேப்டவுனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் உபுல் தரங்கா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர், ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கடந்த 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை என்றும் மறக்க முடியாது. என் மீது நம்பிக்கை வைத்த இலங்கை கிரிக்கெட் போர்டு, போட்டியில் உற்சாகப்படுத்திய ரசிகர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சகவீரர்களுக்கு மனமார்ந்த நன்றி,’’ என, தெரிவித்திருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?