பத்வா: சர்வதேச குத்துச்சண்டையில் தொடரில் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
மான்டினெக்ரோவில் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடந்தது. பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு பைனலில், மேரி கோம் அகாடமியில் பயிற்சி செய்து வரும் சானு, உஸ்பெகிஸ்தானின் ஆசிய ஜூனியர் சாம்பியன் சபினாவை 3–2 என வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
69 கி.கி., பிரிவில் கேலோ இந்தியா போட்டியில் அசத்திய இந்தியாவின் அருந்தி, பைனலில் உக்ரைனின் மர்யானாவை 5–0 என வீழ்த்தி, தன் பங்கிற்கு தங்கம் வென்றார். தவிர, ஆல்பியா பதான் (+81 கி.கி.,), வின்கா (60 கி.மீ.,), சனமாச்சா சானு (75 கி.கி.,) தங்கம் கைப்பற்றினார். மொத்தம் ஐந்து தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்ற இந்திய பெண்கள் அணி, பதக்கப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பெற்றது.
உஸ்பெகிஸ்தான் (2 தங்கம்), செக் குடியரசு (1 தங்கம்) அணிகள் அடுத்த இரு இடங்கள் பெற்றன.