Advertisement


ஒசாகா ‛நம்பர்–2’: டென்னிஸ் தரவரிசையில்...

பிப்ரவரி 22, 2021 20:43
 Comments  
 


WTA, ATP, Tennis Ranking, Osaka, Medvedev, Ankita Raina
 

புதுடில்லி: டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ஜப்பானின் ஒசாகா ‛நம்பர்–2’ இடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஓபனில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இத்தொடரில் பைனல் வரை சென்ற அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி, 11 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்தார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி நீடிக்கிறார்.

ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை சென்ற அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 4 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை கைப்பற்றினார்.

அன்கிதா முன்னேற்றம்: இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா, ஒற்றையரில் 13 இடங்கள் முன்னேறி 168வது இடத்தை பிடித்தார். இவர், இரட்டையர் பிரிவு தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி முதன்முறையாக 94வது இடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் சானியாவுக்கு பின், இரட்டையர் பிரிவு தரவரிசையில் ‛டாப்–100’ பட்டியலில் இடம் பிடித்த 2வது இந்திய வீராங்கனையானார்.

மெட்வெடேவ் ‛நம்பர்–3’

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ‛நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆஸ்திரேலிய ஓபனில் 9வது முறையாக கோப்பை வென்ற இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 18வது பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் மெட்வெடேவ், 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஸ்பெயினின் ரபெல் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முறையே 2, 5வது இடத்தில் நீடிக்கின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?