Advertisement


ஸ்ரீசாந்த் 5 விக்கெட்: ‛லிஸ்ட் ஏ’ போட்டியில் அசத்தல்

பிப்ரவரி 22, 2021 20:41
 Comments  
 


Vijay Hazare Trophy, Cricket, UP, Kerala, Sreesanth, 5 Wickets
 

பெங்களூரு: உ.பி., அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் கைப்பற்ற கேரளா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூருவில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான ‛சி’ பிரிவு லீக் போட்டியில் கேரளா, உத்தர பிரதேசம் அணிகள் மோதின. ‛டாஸ்’ வென்ற கேரளா அணி ‛பீல்டிங்’ தேர்வு செய்தது.

உ.பி., அணிக்கு அபிஷேக் கோஸ்வாமி (54), பிரியம் கார்க் (57), அக் ஷ்தீப் நாத் (68) கைகொடுக்க, 49.4 ஓவரில் 283 ரன்களுக்கு ‛ஆல்–அவுட்’ ஆனது. கேரளா சார்பில் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கேரளா அணிக்கு ராபின் உத்தப்பா (81), கேப்டன் சச்சின் பேபி (76) நம்பிக்கை தர, 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

15 ஆண்டுகளுக்கு பின்: வேகத்தில் அசத்திய ஸ்ரீசாந்த், 15 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக ‛லிஸ்ட் ஏ’ போட்டியில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார். கடைசியாக 2006ல் இந்துாரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 ஓவரில், 55 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், 7 ஆண்டு தடைவிதிக்கப்பட்டார். தடைக்கு பின் மீண்டும் போட்டிக்கு திரும்பிய இவர், ஒடிசா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் 2 விக்கெட் கைப்பற்றினார். இதுவரை 88 ‛லிஸ்ட் ஏ’ போட்டியில்  118 விக்கெட் சாய்த்துள்ளார். இதில் 2 முறை, ஒரு போட்டியில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?