Advertisement


சென்னை–கேரளா ‘டிரா’

பிப்ரவரி 21, 2021 22:48
 Comments  
 


Indian Super League Soccer, ISL Football, Chennai, Kerala, Goa, Bangalore
 

பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை, கேரளா அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கேரளா அணிகள் மோதின. விறுவிறுப்பான  இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1–1 என, ‘டிரா’ ஆனது. சென்னை அணியின் பதுல்லோ (10வது நிமிடம்), கேரளா சார்பில் கேரி கூப்பர் (29வது) தலா ஒரு கோலடித்தனர். சென்னை அணி, 20 போட்டியில், 3 வெற்றி, 11 ‘டிரா’, 6 தோல்வி என, 20 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது. கேரளா அணி, 17 புள்ளிகளுடன் 10வது இடத்தில் தொடர்கிறது.

 

கோவா அசத்தல்

படோர்டாவில் நடந்த லீக் போட்டியில் கோவா, பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோவா அணியின் இகோர் அங்குலோ முதல் கோலடித்தார். தொடர்ந்து அசத்திய கோவா அணிக்கு 23வது நிமிடத்தில் ரெடீம் டிலாங், தன்பங்கிற்கு ஒரு கோலடித்து 2–0 என, முன்னிலை பெற்றுத்தந்தார். இந்நிலையில் எழுச்சி கண்ட பெங்களூரு அணிக்கு 33வது நிமிடத்தில் வாங்ஜாம் ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் கோவா அணி 2–1 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் கோவா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 19 போட்டியில், 7 வெற்றி, 9 ‘டிரா’, 3 தோல்வி என, 30 புள்ளிகளுடன் கோவா அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. கேரளா அணி, 18 போட்டியில், 3 வெற்றி, 7 ‘டிரா’, 8 தோல்வி என, 16 புள்ளிகளுடன் 10வது இடத்தில் நீடிக்கிறது.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?