புத்வா: சர்வதேச குத்துச்சண்டையில் இந்தியாவின் விங்கா (60 கி.கி.,), சனமாச்ச சானு (75 கி.கி.,) தங்கம் வென்றனர்.
மான்டினேக்ரோவில், சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 60 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் விங்கா, மால்டோவாவின் கிறிஸ்டினா கிரிப்பர் மோதினர். அபாரமாக ஆடிய விங்கா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். பின், 75 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சனமாச்ச சானு 5–0 என, சகவீராங்கனை ராஜ் சாஹிபாவை தோற்கடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் கிதிகா 1–4 என, உஸ்பெகிஸ்தானின் பர்சோனா போசிலோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் பிரீத்தி (பெண்கள் 57 கி.கி.,), பிரியான்ஷு தபாஸ் (ஆண்கள் 49 கி.கி.,), ஜக்னுா (+91 கி.கி.,) தலா ஒரு வெண்கலம் வென்றனர்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் கிடைத்துள்ளது. முன்னதாக ஆல்பியா பதான் (+81 கி.கி.,) தங்கம் வென்றிருந்தார்.