Advertisement


கோப்பை வென்றார் ஜோகோவிச்: ஆஸி., ஓபனில் தொடரும் ஆதிக்கம்

பிப்ரவரி 21, 2021 16:17
 Comments  
 


Australia Open Tennis, Novak Djokovic, Champion, Mens Single, Daniil Medvedev, Runner Up
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் கோப்பை வென்றார். பைனலில் ரஷ்யாவின் மெட்வெடேவை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர். முதல் செட்டை 7–5 என போராடி கைப்பற்றிய ஜோகோவிச், 2வது செட்டை 6–2 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச், 3வது செட்டை 6–2 என வென்றார். ஒரு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 7–5, 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார்.

18வது பட்டம்

இது, ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் கைப்பற்றிய 9வது (2008, 2011–13, 2015–16, 2019–21) பட்டம். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 18வது பட்டத்தை தட்டிச் சென்றார். இவர், மற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களான பிரெஞ்ச் ஓபனில் 1 (2016), விம்பிள்டனில் 5 (2011, 2014–15, 2018–19), யு.எஸ்., ஓபனில் 3 (2011, 2015, 2018) முறை கோப்பை வென்றுள்ளார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஸ்பெயினின் ரபெல் நடால் (20), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20) ஆகியோருக்கு பின், 3வது இடத்தில் தொடர்கிறார்.

முற்றுப்புள்ளி

பைனலில் ஜோகோவிச் வென்றதன்மூலம், தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி கண்ட மெட்வெடேவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தவிர, மெட்வெடேவுக்கு எதிராக 5வது வெற்றியை பெற்றார் ஜோகோவிச். இவர்கள் இருவரும் 8 போட்டியில் மோதினர். இதில் ஜோகோவிச் 5, மெட்வெடேவ் 3ல் வென்றனர்.

ரூ. 15.5 கோடி பரிசு

ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச், கோப்பையுடன் ரூ. 15.5 கோடி பரிசுத் தொகை வென்றார். பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த ரஷ்யாவின் மெட்வெடேவ், ரூ. 8.5 கோடி பரிசுத் தொகை பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?