Advertisement


சொக்க வைக்கும் மைதானம்! * சொக்கிப் போன இந்திய வீரர்கள்

பிப்ரவரி 20, 2021 22:37
 Comments  
 


Massive Motera leaves India stars astonished, Sardar patel
 

ஆமதாபாத்: உலகின் பெரிய ஆமதாபாத் மைதானத்தை பார்த்த ஹர்திக் பாண்ட்யா, புஜாரா, மயங்க் அகர்வால் உள்ளிட்ட இந்திய வீரர்கள் வியப்பு தெரிவித்தனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அடுத்த இரு போட்டிகள் உலகின் பெரிய ஆமதாபாத், சர்தார் படேல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் ஆமதாபாத் வந்துள்ளனர். மூன்றாவது டெஸ்ட் வரும் 24ல் பகலிரவு போட்டியாக மதியம் 2:30 மணிக்கு துவங்குகிறது.

போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதால், 55,000 பேர் மைதானத்தில் திரள காத்திருக்கின்றனர். நேற்று மைதானத்தை பார்வையிட்ட முன்னணி இந்திய வீரர்கள் கூறியது:

ஹர்திக் பாண்ட்யா: உண்மையை சொல்வதென்றால் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நிற்கிறோம், இங்கு ரசிகர்கள் நிரம்பி வழியும் அந்த அழகான சூழலை காண, காத்திருக்கிறோம். மைதானத்தை சுற்றிப் பார்க்கவே எங்களுக்கு ஒரு மணி நேரம் ஆனது.

வீரர்களுக்கு தரப்பட்டுள்ள வசதிகளைப் பார்த்த போது, இந்தியாவில் இதுபோன்று இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இங்கு பல்வேறு போட்டிகளை நடத்தலாம். வீரர்களுக்கான பெரிய ‘டிரசிங் ரூம்’ அருகே ‘ஜிம்’ அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானது. கடினமாக உழைத்து சொக்க வைக்கும் மைதானத்தை உருவாக்கியுள்ளனர். இதற்காக குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு எவ்வளவு நன்றி.

புஜாரா: சர்தார் படேல் மைதானம் பெரியது. வித்தியாசமான உணர்வைத் தருகிறது. ‘டிரசிங் ரூம்’ பரந்து விரிந்து விசாலாமாக உள்ளது. ‘ஜிம்மும்’ சேர்ந்திருப்பதால், போட்டி நேரத்தில் கூட உடற்பயிற்சியில் ஈடுபடலாம். இங்கு ‘பிங்க்’ பந்தில் (இளஞ்சிகப்பு), பகலிரவு டெஸ்ட் விளையாடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

சுப்மன் கில்: உலகின் பெரிய மைதானம் இந்தியாவில் உள்ளது. இது எங்களுக்கு பெருமைப்படத்தக்க தருணம்.

மயங்க் அகர்வால்: மைதானத்துக்குள் நுழைந்து காலரிகளை பார்த்ததும் அப்படியே வியந்து விட்டோம். இதற்கு முன் இவ்வளவு பெரிய மைதானத்தில் விளையாடியது இல்லை.

 

1,10,000

குஜராத்தின் சபர்மதி ஆற்றங்கரையில் 1982ல் 50 ஏக்கரில் 49,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டது. 

* 2020ல் 63 ஏக்கரில், மூன்று நுழைவு வாயில்களுடன் 1,10,000 பேர் அமரும் வகையில் மைதானம் புதிதாக கட்டப்பட்டது.

* உலகின் முதன் முறையாக 11 ஆடுகளங்கள், 9 பயிற்சி ஆடுகளங்கள், நான்கு ‘டிரசிங் ரூம்’, அதனுடன் இணைந்த ‘ஜிம்’, வி.ஐ.பி., அமரும் வகையில் 74 ‘கார்பரேட் பாக்ஸ்’ உள்ளன.  

* ‘பெவிலியனுடன்’ கூடிய இரண்டு பயிற்சி மைதானங்கள் உள்ளன.

* உலகில் முதன் முறையாக மைதான மேற்கூரைகளில் சுற்றிலும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவில் எந்த இடத்திலும் நிழல் விழாது. 

* 8 செ.மீ., மழை பெய்தாலும் 30 நிமிடத்தில் நீரை அகற்றும் வசதி உள்ளன. 

* காலரியில் எந்த இடத்திலும் துாண்கள் இல்லாததால், போட்டியை சிரமம் இல்லாமல் பார்க்கலாம்.

 

வந்தே மாதரம்...

நேற்று இங்கிலாந்து வீரர்கள் ஓட்டம், பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. இதன் பின்னணியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி செய்தது வித்தியாசமாக இருந்தது. 

 

பிப். 24

ஆமதாபாத் மைதானம் கடந்த 2020, பிப். 24ல் திறக்கப்பட்டது. சரியாக ஒரு ஆண்டு கழித்து மீண்டும் 2021, பிப். 24ல் இங்கு, முதல் சர்வதேச போட்டி (இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட்) நடக்கவுள்ளது.


1,14,000

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமை ஆமதாபாத்துக்கு கிடைத்தது. இங்கு 1,10,000 பேர் அமரலாம். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் (90,000) பெரியதாக இருந்தது.

* ஒட்டுமொத்த அளவில் ஆமதாபாத், உலகின் இரண்டாவது பெரிய மைதானம் ஆனது. முதலிடத்தில் வட கொரியாவின் பியாங்யங் மைதானம் உள்ளது. இங்கு 1,14,000 பேர் அமரலாம்.

 

17

ஆமதாபாத் மைதானத்தில் டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 17 வகை விளையாட்டு போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் உள்ளது.

 

ஆஸ்திரேலிய புல்

மைதானத்தின் தரைப்பகுதி 18 அங்குல உயரம் மணலால் ஆனது. விதைகளை துாவி ஆஸ்திரேலியாவில் உள்ளதைப் போல புற்கள் வளர்க்கப்பட்டன.

 

விருந்தினர் அரங்கம்

மைதானத்தின் மூன்றாவது தளத்தில் 500 பேர் அமரும் வகையில் விருந்தினர் அரங்கம் உள்ளது.


இம்மைதானத்தில் இதுவரை...

ஆமதாபாத், சர்தார் படேல் மைதானத்தில் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 4 வெற்றி, 2 தோல்வியை பெற்றது. ஆறு போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

* கடந்த 2009ல் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அதிகபட்சமாக 760/7 (‘டிக்ளேர்’) ரன்கள் குவித்தது. கடந்த 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 583/7 (‘டிக்ளர்’) ரன்கள் எடுத்தது. இது, இம்மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்.

* ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் மகிளா ஜெயவர்தனே (275 ரன்கள், 2009), இந்தியாவின் ராகுல் டிராவிட் (222 ரன்கள், எதிர்: நியூசி., 1999), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (217* ரன்கள், 2008), இந்தியாவின் சச்சின் (217 ரன்கள், எதிர்: நியூசி., 1999) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் இந்தியாவின் டிராவிட் (771 ரன்கள், 7 டெஸ்ட்), சச்சின் (642 ரன்கள், 9 டெஸ்ட்), லட்சுமண் (574 ரன்கள், 7 டெஸ்ட்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் அனில் கும்ளே (36 விக்கெட், 7 டெஸ்ட்), ஹர்பஜன் சிங் (29 விக்கெட், 7 விக்கெட்), கபில்தேவ் (14 விக்கெட், 3 டெஸ்ட்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* கடந்த 1983ல் நடந்த விண்டீசுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் கபில்தேவ், 30.3 ஓவர்கள் பந்துவீசி, 83 ரன்கள் விட்டுக்கொடுத்து, 9 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் இம்மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதன்பின் இந்தியாவின் ஹர்பஜன் சிங், அனில் கும்ளே தலா 7 விக்கெட் வீழ்த்தினர்.

* இம்மைதானத்தில் 24 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி பங்கேற்ற 16 போட்டிகளில், 7 வெற்றி, 8 தோல்வி கிடைத்தது. ஒரு போட்டி ரத்தானது.

* இங்கு, ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி நடந்துள்ளது. கடந்த 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?