Advertisement


அன்கிதா ஜோடி சாம்பியன்

பிப்ரவரி 19, 2021 20:34
 Comments  
 


Phillip Island Trophy Tennis, Ankita Raina, Kamilla Rakhimova, Doubles Title
 

மெல்போர்ன்: பிலிப் தீவு டிராபி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா, ரஷ்யாவின் கமில்லா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., பிலிப் தீவு டிராபி டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் கமில்லா ராகிமோவா ஜோடி, ரஷ்யாவின் அனா பிலின்கோவா, அனஸ்டாசியா போடபோவா ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 2–6 என இழந்த அன்கிதா ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6–4 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ மீண்டும் அசத்திய இந்தியா–ரஷ்ய ஜோடி 10–7 என வென்றது. முடிவில் அன்கிதா–கமில்லா ஜோடி 2–6, 6–4, 10–7 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. இது, டபிள்யு.டி.ஏ., இரட்டையரில் அன்கிதா வென்ற முதல் சாம்பியன் பட்டம்.

டபிள்யு.டி.ஏ., இரட்டையர் பிரிவு தரவரிசையில் 115வது இடத்தில் உள்ள அன்கிதா, இந்த வெற்றியின்மூலம் 94வது இடம் பெற உள்ளார். இதன்மூலம் சானியா மிர்சாவிற்கு பின், ‘டாப்–100’ பட்டியலில் இடம் பெறும் 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?