Advertisement


ஆஸி., ஓபன்: பைனலில் மெட்வெடேவ்

பிப்ரவரி 19, 2021 20:27
 Comments  
 


Australia Open Tennis, Daniil Medvedev, Russia, Final, Novak Djokovic, Mertens, Sabalenka, Champion, Osaka, Brady, Final
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலுக்கு ரஷ்யாவின் மெட்வெடேவ் முன்னேறினார். அரையிறுதியில் கிரீஸ் வீரர் சிட்சிபாசை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–4’ ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், 6வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். முதலிரண்டு செட்களை 6–4, 6–2 என மிகச் சுலபமாக கைப்பற்றிய மெட்வெடேவ், 3வது செட்டை 7–5 என போராடி வென்றார். இரண்டு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் மெட்வெடேவ் 6–4, 6–2, 7–5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர், இத்தொடரில் முதன்முறையாகவும், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 2வது முறையாகவும் பைனலுக்குள் நுழைந்தார். கடந்த 2019 யு.எஸ்., ஓபனில் பைனல் வரை சென்ற மெட்வெடேவ், ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார். நாளை நடக்கவுள்ள பைனலில் மெட்வெடேவ், ‘நடப்பு சாம்பியன்’ மற்றும் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

 

மெர்டென்ஸ்–சபலென்கா சாம்பியன்

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் பெலாரசின் அரினா சபலென்கா, பெல்ஜியத்தில் எலிஸ் மெர்டென்ஸ் ஜோடி 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா, கேத்ரினா சினியகோவா ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது. இது, இந்த ஜோடி கைப்பற்றிய 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதற்கு முன், 2019 யு.எஸ்., ஓபன் பைனலில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, பெலாரசின் விக்டோரியா அசரன்கா ஜோடியை வீழ்த்திய இந்த ஜோடி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியது.

 

ஒசாகா–பிராடி மோதல்

பெண்கள் ஒற்றையரில் இன்று நடக்கவுள்ள பைனலில் உலகின் ‘நம்பர்–3’ ஜப்பானின் நவோமி ஒசாகா, 24வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி மோதுகின்றனர். இதில் ஒசாகா வெற்றி பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலிய ஓபனில் 2வது, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 4வது பட்டத்தை கைப்பற்றலாம். பிராடி வென்றால், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது முதல் பட்டத்தை ருசிக்கலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?