மெல்போர்ன்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், டபிள்யு.டி.ஏ., அந்தஸ்து பெற்ற பிலிப் தீவு டிராபி டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, இத்தாலியின் எலிசபெட்டா கோக்கியாரெட்டோ மோதினர். முதல் செட்டை 5–7 என இழந்த அன்கிதா, பின் எழுச்சி கண்டு அடுத்த இரு செட்களை 6–1, 6–2 என வென்றார்.
முடிவில் அன்கிதா 5–7, 6–1, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இதன்மூலம் டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். தவிர இவர், டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 181வது இடத்தில் இருந்து 156வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.