Advertisement


சென்னை–மும்பை ‘டிரா’ * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...

ஜனவரி 25, 2021 23:13
 Comments  
 


ISL Chennaiyin fc, india, football
 

பம்போலிம்: சென்னை, மும்பை அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. கோவாவின் பம்போலிம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இரு முறை சாம்பியன் ஆன சென்னை அணி, வலிமையான மும்பையை சந்தித்தது. 

முதல் நிமிடத்தில் சென்னையின் சாங்டே அடித்த பந்தை, அம்ரிந்தர் சிங் தடுத்தார். 12வது நிமிடம் எலி சபியா தலையால் அடித்த பந்து கோல் போஸ்ட் மேலாக செல்ல, சென்னை வாய்ப்பு நழுவியது.

21வது நிமிடம் பிபின் சிங் கொடுத்த பந்தை மும்பை வீரர் ஓபெசே தலையால் முட்டி கோலாக மாற்றினார். முதல் பாதியில் மும்பை அணி 1–0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் சென்னை அணிக்கு ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. சாங்டே அடித்த இந்த பந்தை தலையால் முட்டிய கோலாக்க முயன்றார் மெமோ. பந்து கோல் போஸ்ட்டை விட்டு விலகிச் சென்றது. 75வது நிமிடம் சென்னை வீரர் சில்வெஸ்டரை, மும்பையின் அகமது ‘பவுல்’ செய்ய, ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இஸ்மாயில், வலது காலால் பந்தை அடித்து கோலாக மாற்றினார். ஸ்கோர் 1–1 என சமன் ஆனது.

இதன் பின் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முடிவில் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. சென்னை அணி இதுவரை பங்கேற்ற 14 போட்டியில் 3 வெற்றி, 7 ‘டிரா’, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று, பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?