புதுடில்லி: இந்தியா–இங்கிலாந்து மோதும் தொடரில் 50 சதவீத ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதிக்கப்படலாம்.
இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணிநான்கு டெஸ்ட், ஐந்து ‘டுவென்டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கஉள்ளது.முதல் இரு டெஸ்ட்போட்டிகள்சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப். 5–9, 13–17ல் நடக்கவுள்ளன. மூன்றாவது (பகலிரவு, பிப். 24–28), நான்காவது டெஸ்ட் (மார்ச் 4–8) ஆமதாபாத்தில் நடக்கும்.
இத்தொடரின் போது, 50 சதவீத ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிக்கும் முடிவில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் வெளியான செய்தியில்,‘டெஸ்ட் தொடரின் போது 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தமிழகம், குஜராத் கிரிக்கெட் சங்கம், அம்மாநில சுகாதாரத்துறையிடம் பேசி வருகிறோம். ஒருவேளை அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டால், 14வது ஐ.பி.எல்., தொடரிலும் ரசிகர்களை அனுமதிப்போம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.