அபுதாபி: அபுதாபி டென்னிசில் பெலாரசின் சபலென்கா சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு தயாராகும் வகையில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் அபுதாபியில் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரசின் சபலென்கா, ரஷ்யாவின் வெரோனிகாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6–2 என எளிதாக கைப்பற்றினார் சபலென்கா. தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6–2 என வசப்படுத்தினார்.
முடிவில் சபலென்கா 6–2, 6–2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.
கடந்த ஆண்டு கடைசியில் நடந்த ஆஸ்ட்ரவா (செக் குடியரசு), லின்ஸ் (ஆஸ்திரியா) தொடரில் சாதித்த சபலென்கா, அபுதாபியிலும் அசத்தியதை அடுத்து ‘ஹாட்ரிக்’ கோப்பை கைப்பற்றி அசத்தினார். தவிர, டபிள்யு.டி.ஏ., அரங்கில் தொடர்ந்து 15வது வெற்றி பெற்றார். மாதங்களில் விளையாடிய 6 பைனல்களிலும் கோப்பை வென்றுள்ளார். அடுத்து ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்காக மெல்போர்ன் செல்கிறார்.