Advertisement


அன்கிதா ரெய்னா ஏமாற்றம்

ஜனவரி 13, 2021 21:02
 Comments  
 


ankita raina, india, tennis,
 

துபாய்: ஆஸ்திரேலிய ஒபன் தகுதிச்சுற்றின் பைனலில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆங்கில புத்தாண்டின் முதல்கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்வரும் பிப். 8–21ல் நடக்கிறது. 

இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. துபாயில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் பைனலுக்கு இந்தியாவின் அன்கிதா ரெய்னா முன்னேறினார். இதில் செர்பியாவின் டேனிலோவிச்சை சந்தித்தார்.

முதல் செட்டை அன்கிதா 2–6 என எளிதாக இழந்தார். அடுத்த செட்டை 6–3 என கைப்பற்றி பதிலடி தந்த அன்கிதா, மூன்றாவது மற்றும் கடைசி செட்டை 6–1 என இழந்தார். முடிவில் அன்கிதா 2–6, 6–3, 1–6 என போராடி தோல்வியடைந்தார். 

குன்னேஸ்வரன் ஏமாற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிப் போட்டிகள் கத்தாரில் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் குன்னேஸ்வரன், பிரான்சின் லெஸ்டியன்னேவை எதிர்கொண்டார். முதல் செட்டை 2–6 என கோட்டை விட்டார் குன்னேஸ்வரன். அடுத்த செட்டிலும் சொதப்பிய இவர் 3–6 என நழுவவிட்டார். முடிவில் குன்னேஸ்வரன் 2–6, 3–6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?