Advertisement


இங்கிலாந்து–இலங்கை பலப்பரீட்சை

ஜனவரி 13, 2021 20:51
 Comments  
 


england cricket, GALE, sri lanka, TEST
 

காலே: இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று காலேயில் துவங்குகிறது.

இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை வந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராக பயிற்சி போட்டியில் பங்கேற்றது. அப்போது கொரோனா பரவல் வேகமெடுக்க, பயிற்சியை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பியது இங்கிலாந்து அணி. 

ஆங்கில புத்தாண்டில் மீண்டும் இலங்கை வந்தது இங்கிலாந்து. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று காலே மைதானத்தில் துவங்குகிறது.

சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் 0–2 என தோற்ற இலங்கை அணி, சொந்த மண்ணில் எழுச்சி காண முயற்சிக்கும். 

இத்தொடரின் 2வது போட்டியில் விலகிய முன்னணி வீரர் சண்டிமால், அணிக்கு திரும்பியுள்ளார். சீனியர் ‘ஆல் ரவுண்டர்’ மாத்யூஸ், பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட உள்ளார். தவிர காயத்தில் இருந்து மீண்ட சுரங்கா லக்மல், லகிரு குமாரா, கேப்டன் கருணாரத்னே, தென் ஆப்ரிக்க மண்ணில் அசத்திய ‘வேகம்’ விஸ்வா பெர்னாண்டோ என பலரும் அணிக்கு கைகொடுக்கலாம்.

ஜோ ரூட் பலம்

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோ ரூட், மார்க் உட், சாம் கர்ரான் பந்து வீச்சில் அனுபவ ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், பேர்ஸ்டோவ் என நட்சத்திர பட்டாளம் கைகொடுக்க காத்திருக்கிறது. 

சுழல் வீரர் மொயீன் அலி கொரோனா காரணமாக பங்கேற்க முடியாதது சற்று ஏமாற்றம் தான்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?