Advertisement


இந்திய அணி கோப்பை வெல்லும் * சோயப் அக்தர் நம்பிக்கை

ஜனவரி 13, 2021 20:49
 Comments  
 


India have got it in them to beat Australia in Brisbane, Shoaib Akhtar
 

கராச்சி: ‘‘ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடருக்கான கோப்பையை இந்திய அணி வெல்லும்,’’ என சோயப் அக்தர் தெரிவித்தார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணி மோதிய மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. இதில் இரண்டாவது இன்னிங்சில் 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, மொத்தம் 131 ஓவர்கள் பேட்டிங் செய்து, 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 334 ரன்கள் எடுத்து, போட்டியை ‘டிரா’ செய்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியது:

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி தொடரை கைப்பற்றும் என நான் நினைக்கிறேன். இந்திய அணியில் பல வீரர்கள் காயத்தால் விலகினர். தவிர பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர் என்றாலும் இந்திய அணியின் மாற்று வீரர்கள் சிறப்பாக செயல்படும் திறமை உள்ளவர்கள்.

இவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறேன். அனைவரும் இணைந்து மீண்டும் ஒருமுறை கடைசியாக முயற்சித்தால், இந்திய அணியினால் கோப்பை வெல்ல முடியும். 

ஒருவேளை இதெல்லாம் சரியாக நடந்து இந்திய அணி தொடரை வென்று விட்டால், அது மிகப்பெரிய வெற்றியாக அமையும். என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைத்த தொடராக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?