Advertisement


இந்திய வீரர்களுக்கு ரோகித் ‘அட்வைஸ்’

ஜனவரி 13, 2021 20:48
 Comments  
 


Ravi Shastri, Rohit Sharma motivate Indian players
 

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்டில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு ரோகித் சர்மா, ரவி சாஸ்திரி ‘அட்வைஸ்’ வழங்கினர்.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் நாளை பிரிஸ்பேனில் துவங்குகிறது. முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் அணியிலுள்ள வீரர்கள் சோர்வுற்று காணப்படுகின்றனர். இதனால் அனுபவமற்ற வீரர்களுடன் இந்தியா களமிறங்க காத்திருக்கிறது. 

நேற்று இந்திய அணியினர் பிரிஸ்பேன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இப்போட்டியில் அறிமுக வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படும் தமிழக சுழல் ‘ஆல் ரவுண்டர்’ வாஷிங்டன், வலைப்பயிற்சியில் பந்து வீசினார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசி ‘அட்வைஸ்’ செய்தார். 

இதேபோல துணைக் கேப்டன் ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்களுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கினார். 

இதற்கான போட்டோக்களை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டது. அதில்,‘சிட்னியில் முடிந்த நீண்ட போராட்டத்துக்குப் பின், இந்திய அணி வீரர்கள் மீண்டும் இணையும் நேரம் வந்து விட்டது. காபா மைதானத்தில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் இறுதிக்கட்ட பயிற்சிகளை துவக்கியுள்ளோம்,’ என தெரிவித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?