இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் வரும் ஜன. 15ல் துவங்குகிறது. இப்போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பங்கேற்பது சந்தேகம். ஏனெனில் சமீபத்தில் சிட்னியில் நடந்த 3வது டெஸ்டின் போது இவரது அடிவயிற்று பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஒருவேளை இவர், 50 சதவீதம் உடற்தகுதி பெற்றால் இப்போட்டியில் விளையாடலாம்.
இதுகுறித்து முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் மற்றும் கிரிக்கெட் ஆலோசனை குழு தலைவர் மதன் லால் கூறியது: பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. ஒருவேளை இப்போட்டியில் பும்ரா விளையாடினால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். ஏனெனில் பிரிஸ்பேன் மைதானஆடுகளம் பும்ராவின் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும்.
இந்திய அணியில் நிறைய பேர் காயமடைந்திருப்பது பின்னடைவு. இதனால் சிறந்த ‘லெவன்’ அணியை தேர்வு செய்வது கடினம். முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம், மாற்று வீரர்கள் விளையாடும் வாய்ப்பைஉருவாகியுள்ளது. தமிழக ‛சுழல்’ வீரர் அஷ்வின், முழு உடற்தகுதி பெற்று இப்போட்டியில் விளையாடினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.