Advertisement


அபுதாபி ஓபன்: பைனலில் சபலென்கா

ஜனவரி 12, 2021 22:53
 Comments  
 


Abu Dhabi Open Tennis, Semi Final, Aryna Sabalenka, Veronika Kudermetova
 

அபுதாபி: அபுதாபி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு சபலென்கா முன்னேறினார்.

அபுதாபியில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, கிரீசின் மரியா சக்காரி மோதினர். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 2வது செட்டை 6–2 என வென்றார். முடிவில் சபலென்கா 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

இதன்மூலம் டபிள்யு.டி.ஏ., அரங்கில் தொடர்ச்சியாக 14வது வெற்றியை பதிவு செய்தார் சபலென்கா. கடந்த ஆண்டு செக்குடியரசு (4 போட்டி), ஆஸ்திரியாவில் (5 போட்டி) நடந்த தொடர்களில் கோப்பை வென்ற இவர், அபுதாபி ஓபனில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தவிர இவர், இத்தொடரில் கோப்பை வென்றால் டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் தரவரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறலாம்.

மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெட்டோவா, உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் மோதினர். இதில் வெரோனிகா 7–6, 6–4 என வென்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?