Advertisement


அன்கிதா அபாரம்: ஆஸி., ஓபன் தகுதிச் சுற்றில்

ஜனவரி 12, 2021 22:46
 Comments  
 


Australian Open Qualifiers, Tennis, Ankita Raina, Ramkumar Ramanathan
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்திய வீராங்கனை அன்கிதா வெற்றி பெற்றார். இந்திய வீரர் ராம்குமார் தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் பிப். 8–21ல் நடக்கிறது. தற்போது ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று நடக்கின்றன. துபாயில் நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, உக்ரைனின் கதரினா ஜவாட்ஸ்கா மோதினர். அபாரமாக ஆடிய அன்கிதா 6–2, 2–6, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மூன்றாவது தகுதிச் சுற்று போட்டியில் அன்கிதா வெற்றி பெறும் பட்சத்தில், கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரதான சுற்றில் விளையாடும் 3வது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெறலாம். ஏற்கனவே நிர்புமா வைத்தியநாதன் (1998, ஆஸி., ஓபன்), சானியா மிர்சா (2005–2012, ஆஸி., ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யு.எஸ்., ஓபன்) ஆகியோர் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரதான சுற்றில் விளையாடினர்.

கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சீனதைபேயின் டங்–லின் வு மோதினர். இதில் ராம்குமார் 3–6, 2–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?