Advertisement


அரையிறுதியில் குன்னேஸ்வரன்

ஜனவரி 11, 2021 22:33
 Comments  
 


australia open tennis, melbourne, gunneshwaran
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் குன்னேஸ்வரன்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் பிப். 8–21ல் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் (தகுதி) இந்தியாவின் தமிழக வீரர் குன்னேஸ்வரன், கனடாவின் பிராடனை சந்தித்தார். முதல் செட்டை 6–4 வென்ற குன்னேஸ்வரன், அடுத்த செட்டை 4–6 என கோட்டை விட்டார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட்டை குன்னேஸ்வரன் 6–2 என கைப்பற்றினார். முடிவில் குன்னேஸ்வரன் 6–4, 4–6, 6–2 என போராடி வென்று தகுதிச்சுற்றின் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் கர்மான் தண்டி, ஜார்ஜியாவின் மரியத்திடம் 6–7, 6–7 என போராடி வீழ்ந்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?