அபுதாபி: அபுதாபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு பெலாரசின் சபலென்கா முன்னேறினார்.
பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் அபுதாபியில் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரைபகினாவை சந்தித்தார். முதல் செட்டை சபலென்கா 6–4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ரைபகினா 6–4 என வென்று பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அசத்திய சபலென்கா, 6–3 என வசப்படுத்தினார். முடிவில் சபலென்கா 6–4, 4–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
கெனின் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் சோபியா கெனின், காலிறுதியில் கிரீசின் மரியா சக்காரியிடம் 6–2, 2–6, 0–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.