Advertisement


சென்னை–ஒடிசா ‘டிரா’: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ‘விறுவிறு’

ஜனவரி 10, 2021 22:47
 Comments  
 


Indian Super League Foootball, ISL Soccer, Chennai, Odisha, Draw
 

பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை, ஒடிசா அணிகள் மோதிய லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் 2 முறை கோப்பை வென்ற சென்னை அணி, ஒடிசா அணியை எதிர்கொண்டது.

 

போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில் சென்னை வீரர் ரஹீம் அலி கோலடிக்க முயற்சித்த பந்தை ஒடிசா கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் சாமர்த்தியமாக பிடித்தார். ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் சென்னை அணியின் லாலியன்ஜுவாலா சாங்தே, ஜெர்சி கோலடிக்க ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை அனிருத் தபா வீணடித்தார். இந்நிலையில் 42வது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் கோலி அலெக்சாண்டர் துாக்கி அடித்த பந்தை டீகோ மவுரிசியோ தலையால் முட்டி கோலாக்கினார். ஆனால் ‘ஆப்சைடு’ என அறிவிக்கப்பட, ஒடிசா அணியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

 

‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+1வது நிமிடம்) சென்னை வீரர் ரஹீம் அலி ‘கோல் போஸ்ட்டை’ நோக்கி துாக்கி அடித்த பந்தை ஒடிசா கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் கச்சிதமாக பிடித்தார். பின், 45+4வது நிமிடத்தில் சென்னை வீரர் ரீகன் சிங் ‘பாஸ்’ செய்த பந்தை ஜாகுப் சில்வெஸ்டர் கோலாக்க முயற்சித்தார். ஆனால் பந்து ஒடிசா கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங்கின் இடது காலில் பட்டு வெளியே சென்றது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

 

கோல் இல்லை: இரண்டாவது பாதியின் 52வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜேக்கப் டிராட் துாக்கி அடித்த பந்தை ஜெர்ரி மாவிஹ்மிங்தங்கா கோலாக்க முயற்சித்தார். ஆனால் சென்னை கோல்கீப்பர் விஷால் பந்தை தாவிப் பிடித்தார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் சென்னையின் ரஹீம் அலி கோலடிக்க முயற்சித்த பந்து ‘கோல் போஸ்ட்டில்’ பட்டு விலகிச் சென்றது.

தொடர்ந்து போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 0–0 என, ‘டிரா’ ஆனது.

சென்னை அணி, 10 போட்டியில், 2 வெற்றி, 5 ‘டிரா’, 3 தோல்வி என, 11 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் நீடிக்கிறது. ஒடிசா அணி, 10 போட்டியில், ஒரு வெற்றி, 3 ‘டிரா’, 6 தோல்வி என, 6 புள்ளிகளுடன் 10வது இடத்துக்கு முன்னேறியது.

 

கேரளா வெற்றி

மற்றொரு போட்டியில் கேரளா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய கேரளா அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?