Advertisement


தமிழக அணி அபாரம்: சையது முஷ்தாக் அலி டிராபியில்

ஜனவரி 10, 2021 22:34
 Comments  
 


Syed Mushthaq Ali Trophy, National T20 Cricket, Tamil Nadu, Jharkhand
 

கோல்கட்டா: சையது முஷ்தாக் அலி டிராபி தொடரை தமிழக அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த லீக் போட்டியில் 66 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் நடத்தப்படும் தேசிய ‘டுவென்டி–20’ சாம்பியன்ஷிப் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ கர்நாடகா, தமிழகம், மும்பை, டில்லி உள்ளிட்ட 38 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

நேற்று, கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜார்க்கண்ட் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

தமிழக அணிக்கு நாராயண் ஜெகதீசன் (27) சுமாரான துவக்கம் தந்தார். விஜய் சங்கர் (4) நிலைக்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக், 17 பந்தில், 4 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 46 ரன் எடுத்து அவுட்டானார். ஷாரூக் கான் (12), அருண் கார்த்திக் (0) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய துவக்க வீரர் ஹரி நிஷாந்த் அரைசதம் கடந்தார்.

தமிழக அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் (92 ரன், 64 பந்து, 3 சிக்சர், 8 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டன் இஷான் கிஷான் (9), சவுரப் திவாரி (9), அனுகுல் ராய் (4) ஏமாற்றினர். விராத் சிங் (23), ஆனந்த் சிங் (28*) ஆறுதல் தந்தனர். ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் சோனு சிங் 3, சந்தீப் வாரியர் 2, முருகன் அஷ்வின், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

ரெய்னா அரைசதம்

பெங்களூருவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பஞ்சாப், உ.பி., அணிகள் மோதின. பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய உ.பி., அணிக்கு ரெய்னா (56*) அரைசதம் கடந்து கைகொடுத்த போதும், 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டும் எடுத்து, 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?