கோல்கட்டா: ‘ஐ–லீக்’ கால்பந்து தொடரை சென்னை சிட்டி அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 2–1 என, கேரளாவை வீழ்த்தியது.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் ‘ஐ–லீக்’ கால்பந்து தொடரின் 14வது சீசன் கோல்கட்டாவில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் சென்னை சிட்டி, கேரளா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய சென்னை சிட்டி அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் எல்வெடின் ஸ்க்ரிஜெலி (27 வது நிமிடம், ‘பெனால்டி’), விஜய் நாகப்பன் (50வது) தலா ஒரு கோலடித்தனர். கேரளா அணிக்கு டென்னி ஆன்ட்வி (3வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.
மற்றொரு லீக் போட்டியில் பஞ்சாப், அய்சால் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் தகுதிச் சுற்றின் மூலம் நுழைந்த முகமதியன் ஸ்போர்டிங் கிளப் அணி, அறிமுக டில்லி அணியை சந்தித்தது. இதில் முகமதியன் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.