அபுதாபி: அபுதாபி ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா தோல்வியடைந்தார்.
அபுதாபியில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் 2வது சுற்றில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, ரஷ்யாவின் அனஸ்டாசியா கசனோவா மோதினர். இதில் ஏமாற்றிய பிலிஸ்கோவா 2–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6–4, 6–1 என, ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவாவை தோற்கடித்தார். ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா 6–1, 6–4 என, பெலாரசின் அலியாக்சான்ட்ரா சாஸ்னோவிச்சை வென்றார்.
ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவா 7–5, 6–7, 6–3 என, பிரிட்டனின் ஹீதர் வாட்சனை வீழ்த்தினார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6–4, 6–4 என, சீனாவின் ஜியு வாங்கை வென்றார்.