புதுடில்லி: மைக்கேல் சூமாக்கர் மகன் மைக் சூமாக்கர், 2021ம் ஆண்டு முதல் ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் களமிறங்க காத்திருக்கிறார்.
‘பார்முலா–1’ கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஜெர்மனியின் சூமாக்கர், 51. கடந்த 2013, டிசம்பர் மாதம் புத்தாண்டு கொண்டாட பாரிஸ் சென்ற போது, ஆல்ப்ஸ் மலையில் நடந்த பனிச்சறுக்கு விபத்தில் சிக்கி, கோமாவில் உள்ளார்.
இவரது மகன் மைக் சூமாக்கர், 21. ‘பார்முலா–3’ மற்றும் ‘பார்முலா–2’ போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு ‘பார்முலா–2’ கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறார். தற்போது 2021 முதல் ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக அமெரிக்காவின் ஹாஸ் ரேசிங் அணியுடன் பல ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். மைக் சூமாக்கருடன், ‘பார்முலா–2’ போட்டிகளில் இணைந்து பங்கேற்ற நிகிதா மஜெபெனும் களமிறங்க உள்ளார்.