Advertisement


ஆஸி., ஓபன் டென்னிஸ் எப்போது

டிசம்பர் 02, 2020 22:42
 Comments  
 


Australia open tennis tournament,
 

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மூன்று வாரங்கள் தாமதமாக, பிப். 8ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆஸ்திரேலிய ஓபன். வழக்கமாக ஜன. மூன்றாவது வாரம் மெல்போர்னில் துவங்கும். ஆனால் மீண்டும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக விக்டோரியா மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடர் துவங்க, மூன்று வார காலம் வரை தாமதம் ஆகும் எனத் தெரிகிறது. இத்தொடருக்காக 2021, ஜன. 15ம் தேதி முதல் ஆஸ்திரேலியா வரும் விளையாட்டு நட்சத்திரங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தவிர கொரோனா சோதனையில் தேறும் பட்சத்தில், இவர்கள் பயிற்சியில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிப். 8ம் தேதி ஆஸ்ரேலிய ஓபன் தொடர் துவங்கும் என நம்பப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?