Advertisement


‘மகாராஜன்’... நம்ம நடராஜன்! * அறிமுகத்தில் அசத்தல் பந்துவீச்சு

டிசம்பர் 02, 2020 08:50
 Comments  
 


India, Australia, 3rd One Day International, Cricket, Natarajan, Debut
 
கான்பரா: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தமிழகத்தின் நடராஜன் வேகத்தில் மிரட்டினார். மற்ற ‘வேகங்களும்’ போட்டுத் தாக்க, இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கோஹ்லி, பாண்ட்யா, ஜடேஜா அரைசதம் விளாசினர்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0–2 என தொடரை இழந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி கான்பராவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மயங்க் அகர்வால், நவ்தீப் சைனி, முகமது ஷமி, சகாலுக்குப் பதில், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் இடம் பெற, தமிழகத்தின் நடராஜன், அறிமுக வாய்ப்பு பெற்றார்.

கோஹ்லி அரைசதம்

இந்திய அணிக்கு ஷிகர் தவான், சுப்மன் கில் ஜோடி துவக்கம் கொடுத்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக அமைய, தவான் (16), சுப்மன் கில் (33), ஸ்ரேயாஸ் ஐயர் (19), ராகுல் (5) என வரிசையாக, சீரான இடைவெளியில் வெளியேறினர். இந்திய அணி 123 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மனம் தளராத கேப்டன் கோஹ்லி (63) 60வது அரைசதம் எட்டி நம்பிக்கை தந்தார்.

சூப்பர் ஜோடி

பின் பாண்ட்யா, ஜடேஜா இணைந்தனர். 40 ஓவரில் இந்தியா 192/5 ரன் எடுத்தது. இதன் பின் இருவரும் ‘வேகம்’ எடுத்தனர். பாண்ட்யா 6வது, ஜடேஜா 13வது அரைசதம் எட்டினர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (66), பாண்ட்யா (92) அவுட்டாகாமல் இருந்தனர்.

நடராஜன் நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், லபுசேன் ஜோடி துவக்கம் கொடுத்தது. நடராஜன் ‘வேகத்தில்’ லபுசேன் (7) போல்டானார். தன்பங்கிற்கு அசத்திய ஷர்துல் தாகூர், ‘அபாய’ ஸ்மித் (7), ஹென்ரிக்சை (22) வெளியேற்றினார். பலமுறை தப்பிப்பிழைத்த பின்ச் (75), ஜடேஜா சுழலில் சிக்கினார். கிரீன் (21), கேரி (38) அவுட்டாக இந்திய அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

பும்ரா ‘சூப்பர்’

ஆனால் மேக்ஸ்வெல் 33 பந்தில் அரைசதம் அடிக்க, ‘டென்ஷன்’ ஏற்பட்டது. இவரை 59 ரன்னுக்கு பும்ரா போல்டாக்க, அபாட்டை (4), ஷர்துல் திருப்பி அனுப்பினார். நடராஜன் தன் பங்கிற்கு ஏகாரை (28) அவுட்டாக்க, இந்தியா பக்கம் திரும்பியது வெற்றி. கடைசியில் ஜாம்பா (4) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 289 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில்ஷர்துல் தாகூர் 3, பும்ரா, நடராஜன் தலா 2 விக்கெட் சாய்த்தனர். தொடரை 1–2 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.


7

அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா (7 விக்.,) முதலிடம் பிடித்தார். ஹேசல்வுட் (6), ஷமி (4), பும்ரா (4) அடுத்தடுத்த இடம் பெற்றனர்.


34

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இந்த ஆண்டு பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் ‘பவர்பிளே’யில் மட்டும் 34 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

 

92

பாண்ட்யா ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ரன்களை நேற்று பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கான்பரா போட்டியில் 92 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் சிட்னி போட்டியில் 90 ரன் எடுத்ததே அதிகம்.

 

150

கான்பரா ஒருநாள் போட்டியில் ஜடேஜா, பாண்ட்யா இணைந்து கடைசி 108 பந்தில் 150 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்காக 6 வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இது. முதல் இரு இடத்தில் அம்பதி ராயுடு–ஸ்டூவர்ட் பின்னி (160 ரன், 2015, ஜிம்பாப்வே), தோனி–யுவராஜ் (158, 2005, ஜிம்பாப்வே) ஜோடி உள்ளது.

* ஜடேஜா–பாண்ட்யா இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 21 ஆண்டுக்குப் பின் 6 வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமை பெற்றனர். இதற்கு முன் 1999, கொழும்பு போட்டியில் ரமேஷ்–ராபின் சிங் ஜோடி 123 ரன்கள் எடுத்திருந்தது.

 

210

இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களில் இந்தியாவின் பாண்ட்யா (210 ரன்) இடம் மூன்றாவது பெற்றார். முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியாவின் பின்ச் (249), ஸ்மித் (216) உள்ளனர்.

இதன் விபரம்

வீரர்/அணி போட்டி ரன்

பின்ச்/ஆஸி., 3 249

ஸ்மித்/ஆஸி., 3 216

பாண்ட்யா/இந்தியா 3 210

கோஹ்லி/இந்தியா 3 173

மேக்ஸ்வெல்/ஆஸி., 3 167

 

வெற்றிப் பாதையில்...

நியூசிலாந்து தொடரில் மூன்று ஒருநாள், 2 டெஸ்டில் தோற்ற இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலிய தொடரில் முதல் இரு ஒருநாள் போட்டியில் ஏமாற்றியது. சர்வதேச அரங்கில் தொடர்ந்து 5 ஒருநாள், 2 டெஸ்ட் உட்பட 7 போட்டிகளில் தோற்ற இந்தியா, நேற்று வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

 

இந்தியா ‘நம்பர்–6’

ஐ.சி.சி., ஒருநாள் சூப்பர் லீக் தொடரில் (2020–2022) 13 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் 4, அன்னிய மண்ணில் 4 என 8 தொடரில் (தலா 3 போட்டிகள்) பங்கேற்கும். இந்தியாவுக்கு எதிரான தொடரை 2–1 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா 40 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. இந்தியா, 9 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்

ஆஸ்திரேலியா 6 4 2 40 +0.357

இங்கிலாந்து 6 3 3 30 +0.790

பாகிஸ்தான் 3 2 1 20 +0.741

ஜிம்பாப்வே 3 1 2 10 –0.741

அயர்லாந்து 3 1 2 10 –1.749

இந்தியா 3 1 2 9* –0.717

* சிட்னி போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் 1 புள்ளி குறைப்பு

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?