Advertisement


கான்பரா...வெற்றி காண்பரா * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

டிசம்பர் 01, 2020 22:11
 Comments  
 


india vs australia, bumrah, india, cricket
 

கான்பரா: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பராவில் நடக்கிறது. இதிலாவது இந்திய அணியினர் வெற்றி காண்பரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0–2 என தொடரை இழந்தது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று கான்பராவில் நடக்கிறது.

பேட்டிங் நம்பிக்கை

இந்திய அணிக்கு பேட்டிங் வரிசை நம்பிக்கை தருகிறது. மயங்க் அகர்வால் கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கிறார். தவான், கேப்டன் கோஹ்லி, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் என பலரும் ‘மிடில் ஆர்டரில்’ ரன் சேர்க்க உதவுகின்றனர். பின் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, போட்டியை வெற்றிகரமாக ‘பினிஷிங்’ செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பவுலிங் மோசம்

பந்துவீச்சு தான் பெரும் ஏமாற்றம் தருகிறது. முதல் இரு போட்டியில் 374, 389 என ரன்களை வாரி வழங்கிய இந்திய அணி பவுலர்கள், மொத்தம் 9 விக்கெட்டுகள் தான் கைப்பற்றினர். முகமது ஷமி மட்டும் 4 விக்கெட் வீழ்த்த, மற்ற நான்கு பவுலர்களும் 2 போட்டியில் 5 விக்கெட் தான் வீழ்த்தினர்.

பும்ரா (152 ரன்/2 விக்.,) மீள வேண்டும். நவ்தீப் சைனிக்கு (153 ரன்/1 விக்.,) மாற்றாக ஷர்துல் தாகூர் அல்லது தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜனுக்கு வாய்ப்பு தரலாம். சுழலில் சகாலுக்கு (160/2 விக்.,) மாற்றாக குல்தீப் இடம் பெறலாம்.

ஸ்மித் பலம்

ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மிரட்டுகிறது. வார்னர் விலகினாலும், கேப்டன் பின்ச் இந்தியாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் ரன் மழை பொழிகிறார். ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக 13 போட்டியில் (108 ரன்) ஒரு சிக்சர் கூட அடிக்காத மேக்ஸ்வெல், 2 போட்டியில் 7 சிக்சர் உட்பட 108 ரன் எடுத்து, வெறுப்பேற்றுகிறார். அணியில் மாத்யூ வேட், டி ஆர்சி ஷர்ட் இடம் பெறலாம்.

சுமார் கூட்டணி

பந்து வீச்சை பொறுத்தவரையில் சுழலில் ஆடம் ஜாம்பா (6 விக்.,), வேகப்பந்து வீச்சில் ஹேசல்வுட் (5) சிறப்பாக செயல்படுகின்றனர். முன்னணி பவுலர் ஸ்டார்க் (147 ரன்/1 விக்.,) அதிக ரன்களை விட்டுத் தருகிறார்.

 

ஆடுகளம் சாதகமா

கான்பெரா ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். கடைசியாக இங்கு நடந்த நான்கு ஒருநாள் போட்டிகளில் முதலில் களமிறங்கிய அணிகள் 372/2, 411/4, 348/8, 378/5 என ரன்கள் குவித்தன. இங்கு நடந்த கடைசி 7 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வென்றன. இதனால் ‘டாஸ்’ இன்று முக்கிய பங்கு வகிக்கலாம்.

 

12,000

இந்திய அணி கேப்டன் கோஹ்லி. ஒருநாள் அரங்கில் 250 போட்டியில் 11,977 ரன்கள் எடுத்துள்ளார். இன்று 23 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அதிவேகமாக 12,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆகலாம். இதற்கு முன் இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின், 309 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

 

மறக்க முடியுமா

கடந்த 2016ல் இந்திய அணி இங்கு, ஆஸ்திரேலியா (348/8) இலக்கை ‘சேஸ்’ செய்தது. 37.3 ஓவரில் 277/1 என வலுவான நிலையில் இருந்தது. அடுத்து 46 ரன் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்த இந்தியா (323/10) வீழ்ந்தது. இன்று எழுச்சி பெறும் என நம்பப்படுகிறது.

 

ஸ்மித்தை வீழ்த்த ‘அட்வைஸ்’

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில்,‘‘ஸ்மித் களமிறங்கியதும் சகால், குல்தீப் இணைந்து தொடர்ந்து 7 அல்லது 8 ஓவர்கள் பந்து வீச வேண்டும். இதை சரியாகச் செய்தால் அவரை விரைவில் அவுட்டாக்கலாம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?