Advertisement


கோஹ்லியை முறைத்தது ஏன்: சூர்யகுமார் விளக்கம்

நவம்பர் 21, 2020 22:32
 Comments  
 


IPL 2020, T20 Cricket, Suryakumar Yadav, Virat Kohli
 

மும்பை: ‘‘போட்டியின் சூழ்நிலை காரணமாக நானும், கோஹ்லியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டோம்,’’ என, சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி (166/5, 19.1 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசாத்தில் பெங்களூரு அணியை (164/6, 20 ஓவர்) வீழ்த்தியது. மும்பையின் சூர்யகுமார் யாதவ், 43 பந்தில் 79 ரன்கள் (3 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். இப்போட்டியின் 13வது ஓவரில் ஸ்டைன் (பெங்களூரு) வீசிய பந்தை சூர்யகுமார் அடித்தார். அதனை தடுத்த கோஹ்லி, சூர்யகுமாரை நோக்கி வந்தார். அப்போது இருவரும் முறைத்துக் கொண்டனர்.

இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறியது: இரு அணிகளுக்கும் வெற்றி தேவைப்பட்டது. இதனால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இப்போட்டியில் இச்சம்பவம் இயல்பாக நடந்தது. வேறு எந்த காரணமும் கிடையாது. போட்டி முடிந்த பின் இதுகுறித்து சிரித்தோம். சிறப்பாக விளையாடியதற்காக கோஹ்லி என்னை வாழ்த்தினார். இவர், எங்கு விளையாடினாலும், எவ்வகை போட்டியாக இருந்தாலும் களத்தில் ஆக்ரோஷமாக காணப்படுவார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் இவரது செயல்பாடு எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்படாததால் மிகவும் வருத்தமடைந்தேன். அப்போது ரோகித், சச்சின் உள்ளிட்டோர் என்னை ஊக்கப்படுத்தினர். ‘டுவென்டி–20’ உலக கோப்பை அணியில் இடம் பெறுவவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சூர்யகுமார் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?