Advertisement


ரகுநாத் சந்தோர்கர் ‘100’

நவம்பர் 21, 2020 22:23
 Comments  
 


Raghunath Chandorkar, Cricket, First Class Match, 100 Age
 

மும்பை: முதல் தர கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர், தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் கர்ஜாத் நகரை சேர்ந்த முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர், 1920, நவ. 21ல் பிறந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், மஹாராஷ்டிரா (1943–44 முதல் 1946–47 வரை), பாம்பே (1950–51) அணிகளுக்காக விளையாடினார். மொத்தம் 7 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர், 155 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 37 ரன் எடுத்தார். விக்கெட் கீப்பராக 3 ‘கேட்ச்’, 2 ‘ஸ்டெம்பிங்’ செய்தார். தவிர இவர், பவுலிங்கில் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இந்நிலையில் நேற்று, ரகுநாத் சந்தோர்கர் தனது 100வது பிறந்த நாள் கொண்டாடினார். இதன்மூலம் வாழும் காலத்தில் 100வது பிறந்த நாள் கொண்டாடிய 3வது இந்திய கிரிக்கெட் வீரரானார். ஏற்கனவே தியோதர் (1892–1993), வசந்த் ராய்ஜி (1920–2020) ஆகியோர் தங்களது 100வது பிறந்த நாள் கொண்டாடினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?