Advertisement


நெருக்கடி எதுவும் இல்லை * முகமது ஷமி நம்பிக்கை

நவம்பர் 21, 2020 20:36
 Comments  
 


My IPL performance has taken pressure off this Australia tour, says Mohammad Shami
 

சிட்னி: ‘‘ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்பட்டது, ஆஸ்திரேலிய தொடரில் நெருக்கடி இல்லாமல் செயல்பட உதவியாக இருக்கும்,’’ என முகமது ஷமி தெரிவித்தார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 30. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது ஆஸ்திரேலிய தொடரின் மூன்று வித இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

ஆஸ்திரேலிய மண்ணில் நீண்ட நாள் தொடரில் பங்கேற்க உள்ளோம். முதலில் ஒருநாள் அடுத்து பகலிரவு டெஸ்ட், பிறகு டெஸ்ட் தொடர் என நடக்கவுள்ளது. எனது கவனம் எல்லாம் டெஸ்ட் தொடரில் தான் உள்ளது. இதற்காக சரியான அளவு மற்றும் வேகத்தில் பந்து வீச முயற்சித்து வருகிறேன். 

சமீபத்தில் ‘டுவென்டி–20’ போட்டிகளில் அதிகம் பங்கேற்று விட்டதால், டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஏனெனில் ஒவ்வொரு வகை போட்டிக்கும் ஏற்ப, வெவ்வேறு இடங்களில் பந்தை ‘பிட்ச்’ செய்ய வேண்டும்.  ஆடுகளத்துக்கு ஏற்ப பந்தை சரியாக வீசத்துவங்கி விட்டால், மூன்று வகை கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும்.

இந்திய அணியில் சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு வலைப்பயிற்சியில் நாங்கள் பந்து வீசி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை எதிரணி வீரர்கள் பெயரை பார்க்கப் போவதில்லை. எங்கள் திறமை மீது மட்டும் கவனம் செலுத்துவோம். நீங்கள் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம், ஆனால் ஒரு சிறப்பான பந்து, உங்களை அவுட்டாக்கி விடும். 

இந்திய பவுலர்கள் 140 கி.மீ., வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர்கள். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இதுபோன்ற ‘வேகங்கள்’ தான் தேவை. இந்திய அணியின் ‘ரிசர்வ்’ வீரர்கள் கூட நல்ல வேகத்தில் தான் பந்து வீசுகின்றனர். இந்திய அணியில் ‘வேகங்கள்’ மற்றும் ‘சுழலுக்கு’ இடையே ஆரோக்கியமான போட்டி தான் நிலவுகிறது. மற்றபடி எங்களுக்குள் எந்த மாறுபாடும் கிடையாது. அன்னிய மண்ணில் எதிரணியின்  20 விக்கெட்டுகளையும் பெரும்பாலும் வீழ்த்தியுள்ளோம். ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்பட்டது, ஆஸ்திரேலிய தொடரில் நெருக்கடி இல்லாமல் செயல்பட உதவியாக இருக்கும்.

இவ்வாறு முகமது ஷமி கூறினார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?