Advertisement


இது தான் என் முடிவு * ரோகித் சர்மா ஆவேசம்

நவம்பர் 21, 2020 20:15
 Comments  
 


Hamstring feeling absolutely fine, Rohit Sharma
 

 பெங்களூரு: ‘‘காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு ஆஸ்திரேலியா செல்ல விரும்புகிறேன். மற்றபடி யாரோ சிலர் பேசுவது குறித்தெல்லாம் கவலையில்லை, இதுதான் எனது முடிவு,’’  என ரோகித் சர்மா தெரிவித்தார். 

இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா 33. ஐ.பி.எல்., தொடரில் தொடையின் பின் பகுதி காயத்தால் அவதிப்பட, ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படவில்லை. ஆனால், மும்பை அணிக்காக ‘பிளே ஆப்’ சுற்றில் களமிறங்கி, பைனலில் 68 ரன்கள் எடுத்து ஐந்தாவது கோப்பை வென்று தந்தார். இதனால் ரோகித் காயம் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார்.

தற்போது ரோகித், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியது:

எனது காயம் குறித்து எல்லோரும் என்ன பேசுகின்றனர், உண்மையில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் போர்டு, மும்பை அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருந்தேன். ‘இது ‘டுவென்டி–20’ போட்டிகள் என்பதால் என்னால் விளையாட முடியும், சமாளித்துக் கொள்கிறேன்,’ என மும்பை அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன். ஒருவேளை வேறு ஏதாவது சிக்கல் என்றால் ‘பிளே ஆப்’ போட்டிகளில் பங்கேற்றிருக்க மாட்டேன். 

தற்போது தொடைப்பகுதி காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வருவதாக உணர்கிறேன். இதற்காக பயிற்சிகளை துவக்கியுள்ளேன்.  இருப்பினும் இன்னும் சில பிரிவுகளில் முன்னேற்றம் தேவைப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கும் முன் ‘இனிமேல் சிக்கல் இல்லை’ என்ற தெளிவான மனநிலைக்கு வர விரும்புகிறேன். இதனால் தான் ஆஸ்திரேலிய தொடருக்கு செல்லாமல் பெங்களூரு கிரிக்கெட் அகாடமிக்கு வந்தேன். 

ஏனெனில் ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடர்களில், 11 நாட்களில் 6 போட்டிகள் உள்ளன.  இடைவெளி குறைவு என்பதால் மீண்டும் காயம் பெரிதாகாமல் தடுக்க வேண்டும். மற்றபடி, நான் ஆஸ்திரேலிய தொடருக்கு வருவேனா, இல்லையா என யாரோ ஒருசிலர் பேசுவது குறித்தெல்லாம் கவலையில்லை. குறைந்தது 25 நாட்கள் பயிற்சிக்கு பிறகு மீண்டு வந்து விடலாம், டெஸ்டில் பங்கேற்கலாம் என நினைக்கிறேன். இதுதான் எனது முடிவு. மற்றவர்களுக்கு ஏன் இது கடினமாக உள்ளது எனத் தெரியவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

 

வெல்ல முடியுமா

மும்பை அணிக்கு ஐந்து முறை ஐ.பி.எல்., கோப்பை வென்றது குறித்து  ரோகித் சர்மா கூறுகையில்,‘‘வேறு அணிக்காக இப்படி சாதிக்க முடியுமா என பலர் பேசுகின்றனர். மற்ற அணிகளுக்காக இதை நான் ஏன் செய்ய வேண்டும். இப்படித் தான் செல்ல வேண்டும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது, அந்த பாதையில் நான் செல்கிறேன். அடிக்கடி வீரர்களை சேர்ப்பதும், பிறகு நீக்குவதும் நிர்வாகத்துக்கு பிடிக்காது. தவிர, மும்பை அணி ஒரே நாளில் சாதித்து விடவில்லை. நான் உட்பட எல்லோரும் 2011 ஏலத்தில் இருந்தோம். மும்பை அணி என்னை தேர்வு செய்தது, நம்பியது, சிறப்பான அணியை உருவாக்கியது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?