Advertisement


அரையிறுதியில் குன்னேஸ்வரன்

நவம்பர் 21, 2020 15:25
 Comments  
 


ATP Challenger Tennis, Orlando, USA, Prajnesh Gunneswaran, Semi Final
 

ஆர்லாண்டோ: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீரர் குன்னேஸ்வரன் முன்னேறினார்.

அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், கஜகஸ்தானின் டிமிட்ரி பாப்கோ மோதினர்.

முதல் செட்டை 6–0 எனக் கைப்பற்றிய குன்னேஸ்வரன், 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார். முடிவில் தமிழகத்தின் குன்னேஸ்வரன் 6–0, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதன்மூலம் ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ‘நம்பர்–1’ இந்திய வீரராகிறார் குன்னேஸ்வரன். தற்போது சுமித் நாகல் 135, குன்னேஸ்வரன் 137வது இடங்களில் உள்ளனர். நாளை வெளியாகும் தரவரிசையில் குன்னேஸ்வரன் 133, சுமித் நாகல் 136வது இடம் பெறலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?