Advertisement


கோல்கட்டா கலக்கல் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

நவம்பர் 20, 2020 22:51
 Comments  
 


Indian Super League, ISL Soccer, Football, Kolkata, Kerala, Roy Krishna
 

பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை கோல்கட்டா மோகன் பகான் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 1–0 என்ற  கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாம்போலிம் நகரில் நடந்த முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சந்தித்தது.

ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கோல்கட்டா அணிக்கு ‘கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. ஹெர்ணான்டஸ் துாக்கி அடித்த பந்தை ராய் கிருஷ்ணா, ‘கோல் போஸ்ட்டுக்கு’ மேலே அனுப்பி வீணடித்தார். பின், 12வது நிமிடத்தில் காயமடைந்த கோல்கட்டா அணியின் மைக்கேல் சூசைராஜுக்கு பதிலாக சுபாசிஷ் களமிறங்கினார். கேரளா வீரரின் காலில் மிதித்த கோல்கட்டாவின் எட்வர்டோ கார்சியா மார்டினுக்க்கு ‘எல்லோ கார்டு’ வழங்கப்பட்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கோல்கட்டா அணிக்கு ராய் கிருஷ்ணா, 62வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். இது, இந்த சீசனின் முதல் கோலானது. கேரளா அணியினர் நீண்ட நேரம் (60%) பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அதனை கோலாக மாற்ற முடியாமல் தவித்தனர். தவிர கேரளாவுக்கு கிடைத்த 6 ‘கார்னர்’ வாய்ப்புகளும் வீணானது.

ஆட்டநேர முடிவில் கோல்கட்டா அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?