Advertisement


ரோகித் இடத்தை ராகுல் நிரப்புவார்: மேக்ஸ்வெல் எச்சரிக்கை

நவம்பர் 20, 2020 22:46
 Comments  
 


India, Australia, Cricket, One Day, T20 Match, Rohit Sharma, KL Rahul, Maxwell
 

மும்பை: ‘‘ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரில் ரோகித் சர்மாவின் இடத்தை லோகேஷ் ராகுல் பூர்த்தி செய்வார்,’’ என, மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (நவ. 27, 29, டிச. 2), மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ (டிச. 4, 6, 8) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ரோகித் சர்மா இடம் பெறவில்லை.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் கூறியது: ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லாதது எங்களுக்கு சாதகமானது. ஏனெனில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர், ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதமடித்துள்ளார். இருப்பினும் இந்திய அணியில் திறமையான நிறைய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். குறிப்பாக ரோகித் சர்மாவின் இடத்தை லோகேஷ் ராகுல் நிரப்புவார் என்று நம்புகிறேன். ஏனெனில், சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுலின் ‘பார்ம்’ தொடரலாம். நெருக்கடியான நேரத்தில் மிகவும் அமைதியாக இருக்கும் இவரை ‘அவுட்’ செய்வது கடினம். இதேபோல மயங்க் அகர்வால், ஷிகர் தவானுடன் இணைந்து நல்ல துவக்கம் தரலாம்.

ஒருநாள் போட்டி, ‘டுவென்டி–20’யில் இருந்து மாறுபட்டது என்பதால் எங்கள் வேகப்பந்துவீச்சாளர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரலாம். பவுன்சருக்கு ஒத்துழைக்கும் ‘பிட்ச்’, பெரிய மைதானம் போன்றவை எங்களுக்கு சாதகமாக அமையலாம். தவிர, ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு திரும்பியது பேட்டிங்கில் பலம் சேர்த்துள்ளது. இது, இந்திய அணிக்கு தலைவலியாக அமையலாம். பொதுவாக, இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் நன்றாக விளையாடக் கூடியவர்.

இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?