Advertisement


ஏ.டி.பி., பைனல்ஸ்: அரையிறுதியில் நடால்

நவம்பர் 20, 2020 22:30
 Comments  
 


ATP Finals, Tennis, Nadal, Semi Final
 

லண்டன்: ஏ.டி.பி., பைனல்ஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்பெயினின் நடால் முன்னேறினார்.

லண்டனில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் உலகின் ‘டாப்–8’ வீரர்கள், 2 பிரிவுகளாக ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதுகின்றனர். ‘பி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்–2’ ஸ்பெயினின் ரபெல் நடால், 6வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய நடால், 2வது செட்டை 4–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–2 என வென்றார்.

முடிவில் நடால் 6–4, 4–6, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மூன்று போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற நடால், அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இத்தொடரில் 10 முறை பங்கேற்ற நடால், 6வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆனால் ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை. அரையிறுதியில் நடால், ரஷ்யாவின் மெட்வெடேவ் மோதுகின்றனர்.

‘பி’ பிரிவில் இருந்து ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், தனது கடைசி லீக் போட்டியில் 2–6, 5–7 என, ரஷ்யாவின் ஆன்ட்ரி ரப்லெவிடம் தோல்வியடைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?