Advertisement


ஐ.சி.சி., புதிய விதிமுறை * இந்தியா இரண்டாவது இடம்

நவம்பர் 20, 2020 21:52
 Comments  
 


Percentage of points to determine final WTC standings
 

துபாய்: ஐ.சி.சி., புதிய விதிமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 9 அணிகள், உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்கும். ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் தரப்படுகிறது. முதல் இரு இடம் பெறும் அணிகள் 2021, ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பைனலில் மோதும். இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296), இங்கிலாந்து (292), நியூசிலாந்து (180) அணிகள் முதல் நான்கு இடத்தில் இருந்தன. திடீரென ஏற்பட்ட கொரோனா காரணமாக பல்வேறு தொடர்கள் ரத்தாகின. 2021 மார்ச் வரை 80 சதவீத போட்டிகள் தான் முடியும். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் போட்டிகள் ரத்தானால் சமபுள்ளிகள் தரப்படும் என விதியை மாற்றி, சதவீத அடிப்படையில் புள்ளிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. கும்ளே தலைமையிலான பரிந்துரை கமிட்டியின் அறிக்கையை ஐ.சி.சி., ஏற்றுக் கொண்டது.

இதனால் அந்தந்த அணிகள் மோதிய போட்டிகள், வெற்றி, தோல்விக்கு ஏற்ப புள்ளிகள் மாறின. சதவீத அடிப்படையில் 296 புள்ளிகள் (3 தொடர்) பெற்ற ஆஸ்திரேலியா (82.22) முதலிடம் பெற, 360 புள்ளிகள் (4 தொடர்) பெற்ற இந்தியா (75.00) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து (60.83) அடுத்த இடத்தில் உள்ளது.

வயது

ஒரு வீரர்/வீராங்கனை, சர்வதேச போட்டியில் பங்கேற்க குறைந்த பட்சம் 15 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது. இது, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிக்கும் பொருந்தும். வீரர்/வீராங்கனையின் பாதுகாப்பு நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

 

 

யார் ‘டாப்’ 

அணி பங்கேற்ற தொடர் பெற்ற புள்ளி சதவீதம்

ஆஸ்திரேலியா 3 296 82.22

இந்தியா 4 320 75.00

இங்கிலாந்து 4 292 60.83

நியூசிலாந்து 3 180 50.00

பாகிஸ்தான் 3.5 166 39.52*

இலங்கை 2 80 33.33

விண்டீஸ் 2 40 16.67

தென் ஆப்ரிக்கா 2 24 10.00

வங்கதேசம் 2.5 0 0*

* பாகிஸ்தான், வங்கதேச அணிகள் இன்னும் ஒரு போட்டியில் மோத வேண்டும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?